Friday 17 June 2016

கவிதை .. அடர் வனத்தில் வெளிச்சம்

வெளிச்சம் வந்தும்
இருளைத் தொலைக்காதிருக்கும்
அடர் வனத்தில்
மகிழ்ச்சியாக
உலவித் திரிய உத்தேசித்த
என் கைகளில் இருந்து விழுந்த
விளக்கின் ஓளி எடுத்து
முதுகின் மேல்
கோடுவரைந்து
வழி காட்டி சென்ற
அந்த மின்மினிப் பூச்சிகளின்
நேசம் ..
இருண்ட வனத்தின் இருளையே
விழுங்கிக் கொண்டு பிரகாசமாக்கியது..

பாமதி

Thursday 26 May 2016

பதிவு - விபச்சாரியின் கோபம்

தொலைத்து விட இனி எதுமே
இல்லை என  விரக்தியை உணரும்  விபச்சாரியிடம் கடன் சொல்லிப் போகும் ஒரு வாடிக்கையாளனைப்   நோக்கி அவள் சினந்து உமிழ்ந்த அந்த உமிழ்நீர் அவன் முகத்தின் மீது வடிந்து கொண்டிருக்க அதில் அவளின் வறுமையில் தொலைத்த கனவுகளின் வலி விம்மி கசிந்தது. 

அவளை நிழலாய் தொடரும்  இயலாமையின்  பாவப்பட்ட  ஆத்மாவின் உஷ்ணத்தை தணித்துக் கொள்ளவதற்காக மடை திறந்தது போல் தூஷணத்தை  பொறுக்கி எடுத்து அவனைத் தூற்றினாள்.

வானம் கருத்து ..

இடியுடனான மழை தூறத் தொடங்கியது.

இனி எவ்வளவு தூரம் பறந்தாலும் விருட்சம் தரும் நிழல்கள் இல்லை என்று உணர்ந்த அந்த  சின்னச் சிறு குருவிகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்த ஒரு மின்கம்பியில் அமர்ந்து கொள்ளவும் சரியாக மழையும் அடித்துக் கொட்டத் தொடங்கியது

விபச்சாரி பேசுவதை நிறுத்திவிட்டு கண்களை தொடைத்த படி தனது வீட்டை நோக்கி மழையில் நனைந்தபடியே  நடக்க   தொடங்கினாள். 

 காற்று பலமாக வீசவும்  கம்பிகள் முன்னும் பின்னும் பலமாக ஆடத்தொடங்கின . அதில் அமர்ந்த குருவிகள் அதைப் பற்றி கவலைப் படாமல் தங்கள் அலகில் விழுந்த மழைத்துளிகளை அதிசயமாக பார்த்து கொண்டே மழையில் நனையத் தொடங்கின..

சில நேரங்களில் வாழ்வு உயிர்வாழ்வதற்காக நிகழ்வாக பல உயிர்களுக்கு மாறிப் போகின்றன.

 வாழ்தலின் நிதி நியாயங்கள் பேச எல்லோருக்கும் கொடுப்பனை கிடைப்பதல்ல..

எல்லாமே ஒரு நிகழ்வாக மட்டும்  கடக்க..சிலருக்கு ஓரு நாளின் இரவு இப்படித்  தொடங்கியிருக்கலாம்

Sunday 22 May 2016

கவிதை புழு சுருண்டு சகதியில்

புழு சுருண்டு
சகதியில் விழுந்து
தலைமோதிய  கணம்
மண்ணுக்கடியில் சிதறித்
தூவித் தெறித்த மகரந்தங்கள்
பூக்க தவறியதால்  ஏதோ வலி
காற்றில் கடைசிவரை
அப்பி பிடித்திருக்கின்றது

மசுக்குட்டி தன் மயிர்களை
உதிர்க்கும்
இலையுதிர் காலத்திற்கு பின் பனி நிலமெல்லாம் உறைந்ததால் வெளி

வர முடியாத விதைகளின்  இயலாமை

எங்குமே தடயங்கள் பரப்பி
வியாப்பித்திருக்க
காலத்தின்
நாட்கள் மட்டும் காத்திருக்கவில்லை

வசந்த காலத்தில்
பட்டாம் பூச்சிகள்
மறுபடியும் பறக்கும்
என்ற கனவுகளை
காவிக் திரிந்து
தொலைத்து விட்டது
ஊனமான
வண்டுகளின் உர்வலம்
மட்டுமே 

எஞ்சியுள்ள இன்றைய
 பிரதிபலிப்பு.

பாமதி சோமசேகரம்

Friday 20 May 2016

பதிவு ..முகமூடிகளும் சுய அடையாளம்

Photography website
மற்றவர்களின் முககமூடிகளை உற்று நோக்கியபடி மனிதன்..தன் சுய முகத்தைக் கூட அடையாளம் காணமுடியாமல் . முரண்களுக்குள் தொலைந்து போகிறான்..

பதிவு.படைப்பு படைப்பாளியிடம் இருந்து பிரிந்து போகின்றது

எப்போது ஒரு படைப்பு வெளி உலகத்தோடு பகிரப்படிகின்றதோ அந்த கணத்தில் இருந்து அந்த படைப்பு படைப்பாளியின் தனிப்பட்ட சுய அனுபவம் என்கின்ற அடையாளத்தை தொலைத்து விடுகிறது..

Wednesday 18 May 2016

கவிதை கோடுகளுக்குள் நிறங்கள்

கோடுகளுக்குள்ளே
நிறங்களை தேக்கி வைக்கும்
மானிடம் சுயம் தொலைத்தாலும்
எங்கோ ஒரு புள்ளியில் மறுபடியும்
விழித்துக் கொள்கின்றது.
சதுரங்க குதிரையின் போராட்டமும்
இறுதியில் முடிந்துதான் போகிறது.
நிறங்களில் தொலைந்து
கணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞனுக்கு
சுயமே ஒரு அடையாளம்தான்
இந்த ஓவியத்தை போல்..

பாமதி சோமசேகரம்

Photography website

Tuesday 17 May 2016

கவிதை -நவீன உலகின் தனிமை

நவீன உலகத்தின்
வெளிச்ச இருளில்
நிழலோடு பேசிக் கொண்டே
நடக்கிறான் மனிதன்
தனிமையில்

பாமதி