Thursday 26 May 2016

பதிவு - விபச்சாரியின் கோபம்

தொலைத்து விட இனி எதுமே
இல்லை என  விரக்தியை உணரும்  விபச்சாரியிடம் கடன் சொல்லிப் போகும் ஒரு வாடிக்கையாளனைப்   நோக்கி அவள் சினந்து உமிழ்ந்த அந்த உமிழ்நீர் அவன் முகத்தின் மீது வடிந்து கொண்டிருக்க அதில் அவளின் வறுமையில் தொலைத்த கனவுகளின் வலி விம்மி கசிந்தது. 

அவளை நிழலாய் தொடரும்  இயலாமையின்  பாவப்பட்ட  ஆத்மாவின் உஷ்ணத்தை தணித்துக் கொள்ளவதற்காக மடை திறந்தது போல் தூஷணத்தை  பொறுக்கி எடுத்து அவனைத் தூற்றினாள்.

வானம் கருத்து ..

இடியுடனான மழை தூறத் தொடங்கியது.

இனி எவ்வளவு தூரம் பறந்தாலும் விருட்சம் தரும் நிழல்கள் இல்லை என்று உணர்ந்த அந்த  சின்னச் சிறு குருவிகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்த ஒரு மின்கம்பியில் அமர்ந்து கொள்ளவும் சரியாக மழையும் அடித்துக் கொட்டத் தொடங்கியது

விபச்சாரி பேசுவதை நிறுத்திவிட்டு கண்களை தொடைத்த படி தனது வீட்டை நோக்கி மழையில் நனைந்தபடியே  நடக்க   தொடங்கினாள். 

 காற்று பலமாக வீசவும்  கம்பிகள் முன்னும் பின்னும் பலமாக ஆடத்தொடங்கின . அதில் அமர்ந்த குருவிகள் அதைப் பற்றி கவலைப் படாமல் தங்கள் அலகில் விழுந்த மழைத்துளிகளை அதிசயமாக பார்த்து கொண்டே மழையில் நனையத் தொடங்கின..

சில நேரங்களில் வாழ்வு உயிர்வாழ்வதற்காக நிகழ்வாக பல உயிர்களுக்கு மாறிப் போகின்றன.

 வாழ்தலின் நிதி நியாயங்கள் பேச எல்லோருக்கும் கொடுப்பனை கிடைப்பதல்ல..

எல்லாமே ஒரு நிகழ்வாக மட்டும்  கடக்க..சிலருக்கு ஓரு நாளின் இரவு இப்படித்  தொடங்கியிருக்கலாம்

Sunday 22 May 2016

கவிதை புழு சுருண்டு சகதியில்

புழு சுருண்டு
சகதியில் விழுந்து
தலைமோதிய  கணம்
மண்ணுக்கடியில் சிதறித்
தூவித் தெறித்த மகரந்தங்கள்
பூக்க தவறியதால்  ஏதோ வலி
காற்றில் கடைசிவரை
அப்பி பிடித்திருக்கின்றது

மசுக்குட்டி தன் மயிர்களை
உதிர்க்கும்
இலையுதிர் காலத்திற்கு பின் பனி நிலமெல்லாம் உறைந்ததால் வெளி

வர முடியாத விதைகளின்  இயலாமை

எங்குமே தடயங்கள் பரப்பி
வியாப்பித்திருக்க
காலத்தின்
நாட்கள் மட்டும் காத்திருக்கவில்லை

வசந்த காலத்தில்
பட்டாம் பூச்சிகள்
மறுபடியும் பறக்கும்
என்ற கனவுகளை
காவிக் திரிந்து
தொலைத்து விட்டது
ஊனமான
வண்டுகளின் உர்வலம்
மட்டுமே 

எஞ்சியுள்ள இன்றைய
 பிரதிபலிப்பு.

பாமதி சோமசேகரம்

Friday 20 May 2016

பதிவு ..முகமூடிகளும் சுய அடையாளம்

Photography website
மற்றவர்களின் முககமூடிகளை உற்று நோக்கியபடி மனிதன்..தன் சுய முகத்தைக் கூட அடையாளம் காணமுடியாமல் . முரண்களுக்குள் தொலைந்து போகிறான்..

பதிவு.படைப்பு படைப்பாளியிடம் இருந்து பிரிந்து போகின்றது

எப்போது ஒரு படைப்பு வெளி உலகத்தோடு பகிரப்படிகின்றதோ அந்த கணத்தில் இருந்து அந்த படைப்பு படைப்பாளியின் தனிப்பட்ட சுய அனுபவம் என்கின்ற அடையாளத்தை தொலைத்து விடுகிறது..

Wednesday 18 May 2016

கவிதை கோடுகளுக்குள் நிறங்கள்

கோடுகளுக்குள்ளே
நிறங்களை தேக்கி வைக்கும்
மானிடம் சுயம் தொலைத்தாலும்
எங்கோ ஒரு புள்ளியில் மறுபடியும்
விழித்துக் கொள்கின்றது.
சதுரங்க குதிரையின் போராட்டமும்
இறுதியில் முடிந்துதான் போகிறது.
நிறங்களில் தொலைந்து
கணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞனுக்கு
சுயமே ஒரு அடையாளம்தான்
இந்த ஓவியத்தை போல்..

பாமதி சோமசேகரம்

Photography website

Tuesday 17 May 2016

கவிதை -நவீன உலகின் தனிமை

நவீன உலகத்தின்
வெளிச்ச இருளில்
நிழலோடு பேசிக் கொண்டே
நடக்கிறான் மனிதன்
தனிமையில்

பாமதி

பதிவு 5- படைப்பாளிகளின் உயிரின் ஒரு துளி

படைப்பாளிகள் தங்கள் உயிரின் ஒரு துளியை இந்த மண்ணிற்காக விட்டு செல்ல முடியுமா

படைப்பாளிகள் தங்கள் உயிரின் ஒரு துளியை இந்த மண்ணிற்காக விட்டுச் செல்லமுடியுமா..
வாழ்க்கை சக்கரத்தில் அந்தரத்தில் உசலாடி உழன்று கொண்டிருக்கும் போதும் வாழ்வே நரகம் என்று  உருகி வெந்து கொண்டிருக்கும் போதும் இந்த மண்ணிற்காக தன் சிந்தனையின் சில துகள்களையாவது காற்றில் கலந்து விட்டு போவார்களா?
எம்மைச் சுற்றி  நடந்து கொண்டிருக்கும் இதயத்தை பிசையும் நிகழ்வுகளை
அவர்களின் நாட்குறிப்பு பக்கங்கள் எழுதாமல் போகுமா?
ஐனநாயத்தின் பெயரில் மனிதம்   ஒளிக்கப்பட்டு   இருளின் வெற்றிடத்தில் அமர்ந்திருக்கிறது அதை நோக்கி ஏதாவது ஒரு கேள்வியை அவர்களால் எழுப்ப முடியுமா? அவர்களின்
பேணாக்களின் மை காய்வதற்கு முன் குருதிதடயங்கள் இருக்கும் இந்த தேசத்தைப் பற்றி
ஒரு சில வரிகளை எழுதுவார்களா

விடியலுக்கான சில வரிகளை பதித்து வைக்குமா அவர்களின் உயிர்?
தெரியாது..ஆனால் எழுதித்தான் ஆக வேண்டும் என்று என் மனம் சொல்கின்றது.

பாமதி சோமசேகரம்

பதிவு 5- அழகான ராட்சத பறவையின் மரணம்

தற்சமயம் நீ தனித்து பறந்து கொண்டிருக்கலாம் ஒரு ஆழமான பாதாளச் சுரங்கத்தினூள்

உன் மரணம் அறிந்து என் இதயத்துடிப்பும் இடமாறி  சுவாசம் இடைவெளி தொலைத்து சீரற்ற கோடுகளாய் வெளிவந்து விழுகின்றது.

என்றோ உனக்குள்ளேயே  நீ தீர்மானித்திருக்க வேண்டும். அதை கேட்பதற்கு நான் யார்..எவருடைய சுதந்திரத்திலும் தலையிடுவதை தவறு என்று நானறிவேன்.

எமக்கிடையில் நிகழ்ந்த மகிழ்ச்சிவான கணங்கள் இப்பவும் என்னைச் சுற்றி அலையும் காற்றில் நிரம்பி வழிகின்றது

ஒரு நீண்ட சமூத்திரத்தின் முன் என் எல்லாக் கேள்விகளை காவிக் கொண்டு நிற்கிறேன். அடிவானத்தை நோக்கி வெறுத்து நிற்கும் என் கண்களில் தேங்கி இருக்கும் சில நீர்த்துளிகளில் இன்னும் உன் சிரிப்பொலி தேங்கி நிற்கிறது.காற்றில் ஒலியில் என் அருகேவட்டமிடுகின்றது.

பசிக்கின்ற குழந்தையின் பசியை உணராத ஒரு தாயின்  குற்றவுணர்வை என் ஆத்மா இப்போது உணர்க்கின்றது.

நிறையவே உன்னை என் சிறுவயது  நினைவுக்குள் தேக்கி வைத்திருக்கிறேன். அதனால்  நீ இல்லாத இனி வரப்போகும் வெறுமையான கணங்களை அந்த நினைவுகளை கொண்டு என்னை ஆற்றிக் கொள்வேன்.

நீ ஒரு ஆழகான ராட்ச பறவை ..நீ பறப்பதற்கு இந்த பூமியின் பரப்பளவு போதாது  என்பதை நான் எப்போதோ அறிவேன்.

மரணத்தின் பின் மரணம் நிகழாது தோழனே அதனால் இனி நீ விழித்திரு.. வாழ்ந்த காலங்களின் வலிமையான
பக்கங்களை நீ பார்த்திருக்க கூடும் அவை உனக்கு இந்த பூமியை கடந்த மாற்று தேசத்தை  அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
ஏன் எதற்கு என்று உன்னை கேட்க போவதில்லை. நீ தேர்ந்தெடுத்த விடுதலை உன்னை பாதுகாக்கட்டும்..உன்னை சுற்றி வீசும் காற்று தன் இதமான இறக்கைகளால் உன்னை அரவணைக்கட்டும். இதமான சூரியக்கதிர்கள் நர்த்தனம் ஆடும் நிலங்களில் நீ துயில் கொள்.

என் விடைகளுக்கான பதில்களை நானே தேடிக் கொள்கிறேன்..சுகமாக பறந்து போ என் ஆழகான ராட்சத பறவையே

பாமதி சோமசேகரம்

Monday 16 May 2016

பதிவு 2-ஆணிவேர்களை அவள் மூத்தமிட்டு கொண்டிருக்கிறாளா

வேர்களை மூத்தமிட்டு கொண்டிருக்கின்றாள் அவள்.  ஆணிவேருக்குள் இருந்து ஏதோ சத்தம் வருவதாய்   எல்லோரையும்  அதை காது வைத்து கேட்கும் படியும் கையை அசைத்து    அழுது ஆழைத்துக் கொண்டிருக்கிறாள்.

நேற்று இந்த மண்ணின் கதைகளை வேர்கள் எழுதி ஏதோ புலம்பிக் கொண்டிருப்பதை அவள் கண்டிருக்க கூடும்.

அவளின்  சுவாசங்களும் வேர்களுக்கு மிக அருகாமையில் ..
வசந்த கால மலர்களை வேர்கள் சூடுவதில்லையே  தனக்கு மட்டும் எதற்கு என்று அவளுக்கு அளிக்கப்பட்ட மலர்களை பிய்த்து எறிந்து கொண்டிருக்கிறாள் சரியான பைத்தியக்காரி.  வசந்த காலத்தில் மலரகள் பூப்பதற்கு தேவையான நீரை வேர்கள் இனி  சேமித்து வைக்காது என்று என்னைப் பார்த்தவுடன் கூச்சல் போடுகிறாள் முட்டாள்தனமாக .

வேர்கள் அறிந்த  பூமியின் ரகசியங்கள் எல்லாம்   வெளியே வராமலே   புதைந்து போகட்டும் என்கிறாள் .

அந்த வேர்களைப் நான் பார்க்கிறேன்..வறண்ட பூமியில் அசிங்கமான நரம்புகளை வெளியே தள்ளிக் கொண்டும் தோல்கள் பிரிந்து சதை தொய்ய மண்ணோடு ஓட்டி நின்றது .  இந்த வேர்களை இவளால்   மட்டும் எப்படி நேசிக்க முடிகிறது..எல்லாமே பொய் வேர்கள்தான் உண்மை என்று எப்படி காதலிக்கமுடிகிறது.
சில மணிநேரங்களில் அந்த வேர்களை அணைத்தப்படி அவள் உறங்கிப் போனாள் அவளை அணைத்தப்படி வேரும் உறங்கத் தொடங்கியது..நானோ ஒரு பறவை இந்த வேரைப் பற்றி மலர்கள் எனக்கு சொன்னதே இல்லை..என்னால் என்ன செய்யமுடியும்..நான் கீழே வந்ததே என் இரைக்கு எதுவும் அகப்படுமா என்றுதான் ..இப்போது வேர் இடுக்கில் ஊர்ந்து திரிந்த அந்த புழுவை உண்ண மனமின்றி விட்டு விட்டு வானத்தை நோக்கிப் பறந்து செல்றேன்.

பாமதி சோமசேகரம்

Sunday 15 May 2016

பதிவு 3-சவக்காளைச் சடங்கு பிரேதம்

சவக்காளையில்  சடங்கிற்காக
வானத்தைப் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது பிரேதம் .

அது குளிர்ந்து
அசைவற்று மணிக்கணக்கில்
எல்லா ஒசைகளும் அடங்கிப் போய்
கருமையான கர்ப்பபையில்  சுருண்டு
களைத்துப் போய் உறங்கு நிலையில்  கிடக்கின்றது. 

உயிரின் விழியில் சுவாசம் மட்டும்
மீண்டும் மீண்டும் மறுபடியும்  அதே
பூஜ்யத்தில் பனிக்கட்டியாய்
உருகிக் கரைந்து கொண்டிருக்கிறதே .

பாமதி சோமசேகரம்

கவிதை - ஆத்மாவை ஊடுறுவும் வலி

இத்தருணத்தில்
உன்னை
ஊடுருவும்
வலி
என் ஆத்மாவை
துரத்தித் துளைத்துகொண்டு
நூறாயிரம்
கேள்விகளும் பதில்களுமாய்
வெளியேறியது

பாமதி
12.04.14

சித்திரப் பதிவு -சூரியன் கதவைத் தட்டுகிறான்

மூடி இருக்கும்
முன் வாசலை திறக்க
முயல்கிறான் படிகளில்
ஏறிவந்து 
நின்ற சூரியன்..

பதிவு 1 -சித்திர விபரணம்/ பழம் விழுதல்

ஒரு கண்ணாடி குவளைக்குள் தோடம்பழம் விழுவது சாதாரணமான நிகழ்வுதான்.
ஆனால் அந்த கணங்களில் எத்தனை அற்புதமான அதிர்வுகள் இந்த வெளியை தொடுகின்றது..

சித்திர விபரணம்.- உடைந்த தண்டவாளம்

எல்லாமே நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விதிவிலக்கா..தடம் புரண்டு கிடக்கும் இந்த  தண்டவாளமும் அழகாகத்தான் இருக்கிறது..விலகிய பலகைகளும்..மண் துகள்களும்..துருப்பிடித்த இரும்பு குழாய்களும்..எனக்கு பிடித்திருக்கிறது இதில் விரிந்து கிடக்கும் குழப்பங்களும்தான்

செவிப்பறையை அதிர வைத்துக் கொண்டு அலையும் ராட்சத மலைப் பாம்புகள்  இதன் மேலேஏறி இனி நகர முடியாது என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி

Photography website

சித்திர விபரணம் - சிறுமியின் துடிப்பு

காலணியை
அணிந்து கொண்டு
தாயுடன் வெளியே போகக்
காத்திருக்கும் ஒரு சிறுமியின்
  துடி துடிப்பு  அழகு..