Sunday 22 May 2016

கவிதை புழு சுருண்டு சகதியில்

புழு சுருண்டு
சகதியில் விழுந்து
தலைமோதிய  கணம்
மண்ணுக்கடியில் சிதறித்
தூவித் தெறித்த மகரந்தங்கள்
பூக்க தவறியதால்  ஏதோ வலி
காற்றில் கடைசிவரை
அப்பி பிடித்திருக்கின்றது

மசுக்குட்டி தன் மயிர்களை
உதிர்க்கும்
இலையுதிர் காலத்திற்கு பின் பனி நிலமெல்லாம் உறைந்ததால் வெளி

வர முடியாத விதைகளின்  இயலாமை

எங்குமே தடயங்கள் பரப்பி
வியாப்பித்திருக்க
காலத்தின்
நாட்கள் மட்டும் காத்திருக்கவில்லை

வசந்த காலத்தில்
பட்டாம் பூச்சிகள்
மறுபடியும் பறக்கும்
என்ற கனவுகளை
காவிக் திரிந்து
தொலைத்து விட்டது
ஊனமான
வண்டுகளின் உர்வலம்
மட்டுமே 

எஞ்சியுள்ள இன்றைய
 பிரதிபலிப்பு.

பாமதி சோமசேகரம்

2 comments:

  1. மெளனத்தையும் கவித்துவத்தோடு மொழிபெயர்க்க கவிஞர்களால் மட்டுமே முடியும் போலும்.
    ஏமாற்றங்களையும் வலிகளையும் காலத்தின் கட்டளைகளையும் அதற்குள் பொதித்து வைத்திருக்கிறது அந்தக் கவித்துவ மெளனம்!

    ReplyDelete
  2. மெளன மொழி பேசப்படாமலே உணரப்படலாம் சிலவேளைகளில்

    ReplyDelete