Wednesday 18 May 2016

கவிதை கோடுகளுக்குள் நிறங்கள்

கோடுகளுக்குள்ளே
நிறங்களை தேக்கி வைக்கும்
மானிடம் சுயம் தொலைத்தாலும்
எங்கோ ஒரு புள்ளியில் மறுபடியும்
விழித்துக் கொள்கின்றது.
சதுரங்க குதிரையின் போராட்டமும்
இறுதியில் முடிந்துதான் போகிறது.
நிறங்களில் தொலைந்து
கணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞனுக்கு
சுயமே ஒரு அடையாளம்தான்
இந்த ஓவியத்தை போல்..

பாமதி சோமசேகரம்

Photography website

2 comments:

  1. எனக்கு இந்தக் கவிதையை விளங்கிக் கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கிறது.ஒவ்வொருவருக்கும் அவரவர் சுயம் தானே கவிஞை அடையாளம்? ஆனால் கவிதை அப்படியே இருக்கட்டும்.அது அவ்வாறு இருப்பதே அதன் அழகு. சில கவிதைகள் தேங்காய் மாதிரி. அவரவர் உடைத்து அவரவருக்குத் தக்கதாக பொருள் எடுத்துக் கொள்ளட்டும்.

    ReplyDelete
  2. ஆமாம் உண்மைதான்..எம் சிந்தனைக் கூடாகத்தான் எம்மால் புரிந்து கொள்ள முடியும். அதுதான் கவிதைக்கு மேலும் அழகு
    சேர்க்கும்.

    ReplyDelete